ARTICLE AD BOX
சென்னை: சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவை தாண்டி சீன ரசிகர்களையும் இந்த அளவுக்கு கவரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த படத்துக்கு ரசிகர்களாகிய நீங்கள் கொடுத்த மிகப்பெரிய அன்புக்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன். இப்படி ஒரு கதையை எழுதி, அந்த கதாபாத்திரங்களை நடிகர்களுக்குள் புகுத்தி தான் விரும்பிய படி படத்தை இயக்கிய நித்திலனுக்கு எப்போதுமே நன்றி கடன் பட்டுள்ளேன்,
நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில், விஜய் சேதுபதி அவ்வளவுதான் அவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். ஆனால், மகாராஜா விஜய் சேதுபதி என ‘மகாராஜா’ படம் என்னை மீண்டும் தூக்கி நிறுத்தியதும் சினிமாவுக்கு உண்மையாக இருக்கும் கலைஞனை சினிமா பாதுகாக்கும் என்பதை புரிந்துக் கொண்டேன். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.