ARTICLE AD BOX
தனது சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு, பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில், அப்பாவிகளான யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் சிக்கிக்கொள்கின்றனர். பிறகு அந்த சைக்கோவிடம் இருந்து அவர்களை ஹீரோ ராஜீவ் கோவிந்த் பிள்ளை காப்பாற்றினாரா? அல்லது மற்ற கொலைகளை போல், அவரையும் அந்த சைக்கோ கொடூரமாக கொன்றானா என்பது மீதி கதை.
ராஜீவ் கோவிந்த் பிள்ளை, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ஹரீஷ் பெராடி, அஷ்ரப் குருக்கள், ஷோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்கள் பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் ஆகியோர் தங்கள் கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர். காதலியின் திடீர் மரணத்துக்கு பிறகு தற்கொலைக்கு முயற்சிக்கும் ராஜீவ் கோவிந்த் பிள்ளை, வித்தியாசமான பாடிலாங்குவேஜ் மூலம் கவனத்தை ஈர்க்கிறார்.
அவருக்கும், யுக்தா பெர்விக்குமான நெருக்கமான காதல் காட்சிகளும், லிப்லாக் காட்சிகளும் ரசிகர்களை சூடேற்றுகிறது. சித்தாரா விஜயன் குடும்பப்பாங்கான கேரக்டரில் பளிச்சிடுகிறார். மகளின் பிரிவை தாங்க முடியாமல் ஹரீஷ் பெராடி தவிப்பதும், அதற்கு காரணமானவர்களை பழிவாங்க துடிப்பதுமாக, வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். ராஜீவ் கோவிந்த் பிள்ளை தன் காதலியை மறப்பதற்காக, அவரது பழைய நினைவுகளை அழிக்க டாக்டர்கள் மேற்கொள்ளும் சிகிச்சை தமிழுக்கு புதிது.
ஆதித்யா கோவிந்தராஜின் மாறுபட்ட கேமரா கோணங்கள், சைக்கோ கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கு ஏற்ப பயணித்துள்ளது. அடர்ந்த காடுகளை பசுமையாக படம் பிடித்திருக்கிறார். ஸ்ரீநாத் விஜய் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன. அதைவிட அவரது பின்னணி இசை, கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவியுள்ளது. சிவம் எழுதிய கதைக்கு சூரியன்.ஜி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 99 நிமிடங்கள் எப்படி கடந்தது என்று ெசால்ல முடியாத அளவுக்கு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறது. இன்னும் எத்தனை படங்களில் பணக்காரர்களின் பேச்சுக்கு போலீசார் கைக்கட்டி நிற்பதாக காட்டுவார்களோ தெரிய
வில்லை.