60 வயதில் ஆமிர்கானுக்கு 3வது திருமணம்: புது காதலியை அறிமுகம் செய்தார்

1 day ago
ARTICLE AD BOX

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தனது மூன்றாவது காதலியை அறிமுகம் செய்து வைத்தார். ஆமிர்கான் நேற்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். முன்னதாக நேற்றுமுன்தினம் இரவு மும்பை பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது தனது நீண்ட கால தோழி கவுரி ஸ்ப்ராட்டுடனான உறவை உறுதி செய்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவருடன் உறவில் இருப்பதாகவும் ஆமிர்கான் தெரிவித்துள்ளார். அப்போது அமீர்கான் கூறுகையில், ‘‘கவுரியும் நானும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். இப்போது நாங்கள் இருவரும் பார்ட்னர்களாக இருக்கிறோம். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்கிறோம். திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம்’’ என தெரிவித்துள்ளார். ஆமிகான் இதற்கு முன் இரண்டு முறை விவாகரத்து ஆனவர்.

2002ல் முதல் மனைவி ரீனா டட்டாவை விவாகரத்து செய்த அவர், அடுத்து 2005ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். அவரையும் 2021ல் விவாகரத்து செய்துவிட்டார். ஆமிர்கானின் மூன்றாவது காதலியான கவுரி ஸ்ப்ராட்டிற்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயதில் மகன் உள்ளார். பெங்களூரில் வசித்து வருகிறார் கவுரி ஸ்ப்ராட். இவரது தாய் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை, ஐரிஸ் இனத்தைச் சேர்ந்தவர்.

 

Read Entire Article