ARTICLE AD BOX

குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். காதல் அழிவதில்லை படத்தில் ஹீரோவா என்ட்ரி கொடுத்தார். தம், கோவில், குத்து, சிலம்பாட்டம், மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம் படங்களில் நடித்து முன்னணி நடிகர் ஆனார். விண்ணைத்தாண்டி வருவாயா என்ற ரொமான்டிக் படம் அதிரி புதிரி வெற்றி பெற்றது. ஒஸ்தி, செக்கச்சிவந்த வானம் படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல சர்ச்சைகளுக்குப் பின் ரீ என்ட்ரியாக மாநாடு படத்தில் நடித்தார். அதுவும் சூப்பர்ஹிட். அப்புறம் வெந்து தணிந்தது காடு, பத்து தல நடித்தார். இப்போது கமலுடன் இணைந்து தக் லைஃப்ல நடித்து வருகிறார். அவர் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள் பற்றிப் பார்ப்போம்.
கோ: கேவி.ஆனந்த் இயக்கத்தில் 2011ல் வெளியான பிளாக்பஸ்டர் படம். ஜீவா, அஜ்மல், கார்த்திகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். நல்ல கதைகளம். படம் சூப்பர்ஹிட். இந்தப் படத்தோட கதையை முதலில் கே.வி.ஆனந்த் சிம்புவிடம்தான் சொன்னாராம். அவர் கதை கேட்டு 'நோ' சொன்னாராம்.

நண்பன்: ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து 2012ல் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படம். இதுல விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துல ஜீவா, ஸ்ரீகாந்த் ரோல்ல நடிக்க முதல்ல சிம்புவிடம்தான் ஷங்கர் கதை சொன்னாராம். கதையைக் கேட்டு சிம்பு நோ சொன்னாராம்.
வடசென்னை: சிம்பு மிஸ் பண்ணின படம். வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிப்பில் 2018ல் வெளியானது. தனுஷ் உடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இது ஒரு சூப்பர்ஹிட் படம். இந்தப் படத்தோட கதையை முதலில் வெற்றிமாறன் சிம்புவிடம்தான் சொன்னாராம். அவர் கதையைக் கேட்டு நோ சொல்லி விட்டாராம். மேலும் சிம்பு வேட்டை, இந்தியன் 2 படங்களையும் தவறவிட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.