ARTICLE AD BOX
கர்நாடக முதலமைச்சர் கருத்துக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என பி. ஆர்.பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான
பி ஆர் பாண்டியன் பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
காவிரியின் குறுக்கே கர்நாடக மேகதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கு காத்திருப்பதாக சித்தராமையா கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.
மேலும் கர்நாடக முதலமைச்சரின் கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனியாக இருப்பது கண்டிக்கத்தக்கது. கண்டை தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
கர்நாடகாவை சார்ந்த தீய சக்திகள் தமிழ் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க மாட்டோம் என பேசி இருப்பது. தமிழர்கள் மீதான தாக்குதல்களை துவக்கும் உள்நோக்கு கொண்டது. எனவே முதலமைச்சர் உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
குத்தகை விவசாயிகளுக்கும் அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும். வழங்க மறுப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். மத்திய அரசு வரும் 19ஆம் தேதி மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை சண்டிகரில் SKM (NP) நிர்வாகிகளுடன் நடத்தவிருக்கிறது.
இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவதற்கான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பையும் நிறைவேற்ற முன்வரவில்லை.
இந்நிலையில் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 19 சண்டிகரில் நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வருவதற்கான உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் மகா பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.
தமிழகம் தழுவிய அளவில் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் மகாசபை கூட்டம் தென்காசி மாவட்டம் புளியறையில் மார்ச் 16-ல் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுமையிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் என்றார்.
க.சண்முகவடிவேல்