ARTICLE AD BOX
வைரத்திலும் பட்டிலும் நம் பெண்களுக்கு எப்படியாவது மோகம் போய்விட்டால் போதும் நம்முடைய குடும்ப வாழ்க்கையும் சமூக வாழ்க்கையும் மட்டுமில்லாமல் ஸ்திரி தர்மமே பிழைத்துப் போய்விடும்.
லட்ச கணக்கான பட்டு பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து எடுக்கிற பட்டினால் நமக்கு ஒரு அலங்காரமா? சாப்பாட்டிலே நாம் சைவம் என்று சொல்லிக் கொண்டால் போதுமா? இத்தனை பட்டு பூச்சிகளின் கொலை பாவத்திற்கு ஆளாகிறோமே என்கிற எண்ணம் பெண்களுக்கு வந்துவிட்டால் போதும்.
இதிலே இன்னொரு அம்சம் இதனால் வசதியில்லாதவர்களுக்கு பட்டிலும் வைரத்திலும் ஆசையை தூண்டிவிடுவது.
எல்லோரும் பட்டு முதலான பகட்டு துணிகளை விட்டு கடைசி தரமான வஸ்திரம் தான் வாங்குவது என்று வைத்துக் கொள்ள வேண்டும். தெலுங்கர்கள் கல்யாணத்தில் வெள்ளை நூல் வஸ்திரத்தை மஞ்சளில் நனைத்து கட்டிக் கொள்கிறார்கள். அது சிக்கனமாக இருக்கிறது. உத்தரதேசத்திலும் சாதாரணமாக சாமானிய வஸ்திங்களைத் தான் பெண்கள் கட்டிக் கொள்கிறார்கள் இங்கே நாமும் அப்படி செய்ய ஆரம்பிக்கலாம்.
காபிக்கு தலைமுழுகி விட்டு காலையில் கோதுமைக் கஞ்சி தான் சாப்பிடுகிறதென்று வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர் சாப்பிடலாம்.
காப்பி சாப்பிடுவது என்ற ஒரு பழக்கத்தை பண்ணி விட்டதால் Substitute அதை மாற்ற ஏதாவது ஒன்று வேண்டுமல்லவா? மோர் தான் அமிர்தம் என்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. இப்படி செய்வதனால் அனேக குடும்பங்களில் செலவில் நூற்றுக்கு அறுபது பங்கு குறைந்து விடும் என்று தோன்றுகிறது.
விவாஹத்துக்காக பணத்தைக் கொண்டு வா என்று வரதட்சணை வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வரனாக இருக்கிற பிள்ளைகளும் இதற்கு சகாயம் செய்ய வேண்டும் பிள்ளைகள் எனக்கு ஆதரவாக அப்பா அம்மாவிடம் வாதம் பண்ணி வரதட்சணையும் சீரும் கேட்காவிட்டால் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சத்யா கிரகம் பண்ண வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.
இது நம் யுவர்கள் கேன்சர் மாதிரி நம் சமூகத்தில் புரையோடி இருக்கின்ற ஒரு கொடுமையை அகற்றி நம் சமுதாய மறுமலர்ச்சிக்கு செய்கிற மகத்தான தொண்டாக இருக்கும். இது குடும்பத்துக்கு மதத்துக்கு சமூகத்துக்கு பெண் குலத்துக்கு எல்லாவற்றிற்கும் செய்கிற தொண்டு இப்படியாக இளைஞர்கள் எல்லாம் செய்து அதை நிறைவேற்ற வேண்டும்.
(காஞ்சிபெரியவரின் கனிமொழிகள் என்ற நூலில் இருந்து தொகுப்பு)