சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்! தலையில் அடிபட்ட நியூசிலாந்து வீரர் களம் புகுந்தார்!

3 hours ago
ARTICLE AD BOX

நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாக, அண்மையில் பீல்டிங் செய்யும் போது நெற்றியில் ஏற்பட்ட மோசமான அடியிலிருந்து தப்பிய ரச்சின் ரவீந்திரா மீண்டும் களமிறங்கியுள்ளார். ராவல்பிண்டியில் வங்கதேசத்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அவர் களமிறங்கியுள்ளார்.  பிப்ரவரி 8ம் தேதி லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, கடந்த வாரம் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டத்தில் ரச்சின் ரவீந்திரா பங்கேற்கவில்லை. 

நெற்றியில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, தொடரின் மீதமுள்ள ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. காயத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, நியூசிலாந்து எந்த ஆபத்தையும் எடுக்கவில்லை. அவருக்கு குணமடைய போதுமான நேரத்தை அனுமதித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்தின் முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பு ரவீந்திர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் இவரது விஷயத்தில் நியூசிலாந்து அணி ரிஸ்க் எடுக்கவில்லை. 

ரூ.7 கோடி மதிப்பிலான வாட்ச் – ஹர்திக் பாண்டியா கையில் கட்டியிருக்கும் வாட்ச்சில் இத்தனை அம்சம் இருக்கா?

இதனால் அவருக்கு போதிய ஓய்வளித்து வங்கதேசக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி இந்த தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானில் விளையாடியன. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதின.

அப்போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் குஷ்தில் ஷா டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் நோக்கி ஒரு பவர்புல் ஷாட்டை அடித்தார். ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா அந்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். அப்போது கடாபி மைதானத்தில் மோசமான வெளிச்சத்தில் கேட்சை தவறாக கணித்ததால் அந்த பந்து நேராக ரச்சின் ரவீந்திராவின் தலைக்கு கீழே நெற்றியில் வேகமாக தாக்கியது. உடனடியாக அவரது நெற்றியில் இருந்து ரத்தம் மளமளவென கொட்டியது. 

உடனடியாக மருத்துவ குழுவினர் மைதானத்திற்குள் நுழைந்து அவரை வெளியே அழைத்து சென்றனர். ரச்சின் ரவீந்திராவுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தீவிரமாக சிகிச்சை பெற்ற நிலையில் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளார். இவர் ஐபில்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின்போது பிரார்த்தனை செய்த பாக். கேப்டன் ரிஸ்வான்! கிண்டல் செய்த சுரேஷ் ரெய்னா!

Read Entire Article