ARTICLE AD BOX
திருமண ஏற்பாடு
தெலுங்கானாவின் கம்மா ரெட்டி மாவட்டத்தில் இருக்கும் பிகானர் பகுதியில் உள்ள ராமேஸ்வர்பள்ளி என்னும் கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான நபர் பாலச்சந்திரம். இவரது மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது.
கன்னியாதான சடங்கு
ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகளில் ஒன்றான கன்னியாதான சடங்கு நடந்தது. அப்போது, அவரது மகளின் கால்களை அவர் கழுவியுள்ளார்.
இதையும் படிங்க: "உன் கணவரை பார்க்கணும்மா" ஆசையாக அழைத்து அரண்மனை பட பாணியில் ஆணவக்கொலை.!
திடீர் மாரடைப்பு
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக பதறிப்போன உறவினர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்து இருக்கின்றனர்.
பெரும் சோகம்
மகளின் திருமணத்தில் தந்தை மாரடைப்பில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மணமகளின் நிலையை கருத்தில் கொண்டு திருமண சடங்குகள் அத்துடன் முடிந்துள்ளது.
இதையும் படிங்க: தாய் என்றும் பாராமல், மது போதையில் 70 வயது மூதாட்டியை மகன் செய்த கொடூரம்.!