சாப்பாட்டில் எண்ணெய்யை குறையுங்க! பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

20 hours ago
ARTICLE AD BOX

சாப்பாட்டில் சேர்க்கும் எண்ணையின் அளவை 10 சதவீதமாவது குறையுங்கள் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியுள்ளதாவது, ”உலகில் 8 பேரில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளின் அவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி விட்டதாகவும் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

குழந்தைகள் இடையே உடல் பருமன் பிரச்னை 4 மடங்கு அதிகரித்துள்ளது மிகவும் கவலை அளிக்கிறது. எனவே சமையலில் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்திடுங்கள்.

இதை முதலில் 10 பேர் சவாலாக ஏற்று செய்யுங்கள். அந்த 10 பேரும் மேலும் 10 பேருக்கு இந்த சவாலை பரப்புங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான, உறுதியான இந்தியாவை உருவாக்க முடியும்” என்று பேசியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு உண்மையிலேயே மிகவும் முக்கியமானதாகும். உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு இந்திய மக்களிடம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஒவ்வொருத்தரும் தன்னுடைய வயது, உயரம் போன்றவற்றிற்கு ஏற்ற உடல் எடை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செயதல் போன்றவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்.

பிரதமர் மோடியின் இந்த அறிவுரையை ஏற்று தங்களுடைய உடல்நலத்தைப் பேணிக்கொள்வது அனைத்து இந்தியர்களின் கடமையாகும்

Read Entire Article