சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்

3 days ago
ARTICLE AD BOX
கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார்

சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 21, 2025
04:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க உள்ளார்.

இந்தத் திரைப்படத்திற்கான தேதிகளை திட்டமிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக கங்குலியே உறுதிப்படுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை பர்தமனில் ஒரு ஊடக சந்திப்பின் போது, ​​சவுரவ் கங்குலி, "நான் கேள்விப்பட்டபடி, ராஜ்குமார் ராவ் அந்த வேடத்தில் (தலைப்பு வேடத்தில்) நடிப்பார், ஆனால் தேதிகள் குறித்த சிக்கல்கள் உள்ளன, எனவே திரைக்கு வர ஒரு வருடத்திற்கும் மேலாகும்" என்று கூறினார்.

வாழ்க்கை வரலாறு

அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு காத்திருக்க வேண்டும்

சிறிது காலமாகவே கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருவது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிய போதும், அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் இதை கங்குலியை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் வேளையில், இந்த அறிவிப்பு நடிகர் மற்றும் கிரிக்கெட் வீரர் இருவரின் ரசிகர்களிடையேயும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் பிற நடிகர்கள் உட்பட படம் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பாலிவுட்டில் பிரபல நடிகரான ராஜ்குமார் ராவ் தமிழ் ரசிகர்களுக்கு ஸ்திரீ படத்தின் மூலம் பிரபலமானார்.

Read Entire Article