``சரியாகப் படிக்கவில்லை..'' - வாளி தண்ணீரில் தலையை முக்கி 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை..?

10 hours ago
ARTICLE AD BOX
ஆந்திராவில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் வனப்பள்ளி சந்திர கிஷோர். இவர் பொதுத்துறைப் பிரிவில் கணக்காளராகப் பணிபுரிகிறார். மார்ச் 14 அன்று குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பிறகு இந்த துயரமான சம்பவத்தைச் செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சர்ப்பவரம் காவல் நிலையத்தில் கிஷோரின் மனைவி ராணி அளித்த புகாரில், தனது கணவர் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும், தன் இரு மகன்களும் வாளியில் உயிரற்ற நிலையில் கிடந்ததாகவும் கூறி இருந்தார். இதனை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குற்றம்

முதற்கட்ட விசாரணையில் தற்கொலை குறிப்பைக் கண்டறிந்த போலீசார், அதில் “கிஷோர் தன் இரு மகன்களும் குறைவான கல்வித் திறமையையே கொண்டுள்ளார்கள். இதனால் அவர்கள் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் போராடுவதற்கு சிரமப்படுவார்கள் என்று எண்ணி தன் மகன்களை தண்ணீர் நிறைந்த வாளியில் மூழ்கடித்து கொன்றதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது” என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து வருவதாகவும், குழந்தைகள் யுகேஜி மற்றும் 1 ஆம் வகுப்பு மட்டுமே படித்து வருவதால், இந்தச் செயல் குழந்தைகளின் கல்வித் திறனுடன் தொடர்புடையது என்பதற்கான விளக்கம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article