ARTICLE AD BOX
செய்தியாளர்: சுதீஷ்
தமிழ்த்திரை உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு. கோவையின் ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர். அதில் மாதவன் கதாநாயகனாகவும் , யோகி பாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார் . இதற்கான படபிடிப்பு இன்று முதல் இரண்டு நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த யோகி பாபு மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயிலுக்கு நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வந்தார். விசேஷ பூஜையான அர்த்தஜாம பூஜையில் கலந்து கொண்டார். இதையடுத்து தான் கொண்டு வந்து புதிய படப்பிடிப்பின் கதை கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து வணங்கி பெற்றுக் கொண்டார்.