ARTICLE AD BOX
இந்தப் பானம் கொலஸ்ட்ராலைக் கரைக்கும், அதற்கு தனியா விதையை இப்படி டீ போட்டு குடியுங்கள் என்று டாக்டர் தீபா அருளாளன் பரிந்துரைக்கிறார்.
கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு, செரிமானப் பிரச்னையை சரி செய்வதற்கு தனியா விதைகள் சிறந்த மருந்தாக செயல்படுகிறது என் காஸ்மோ ஹெல்த் யூடியூப் சேனலில் கூறும் டாக்டர் தீபா அருளாளன், தனியாவின் மருத்துவ பயன்கள், ஆரோக்கிய நன்மைகள் பற்றி கூறுவதை இங்கே பார்க்கலாம்.
தனியாவின் மருத்துவ பயன்கள், ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஹோமியோபதி டாக்டர் தீபா அருளாளன் கூறுகையில், “தனியாவில் இருக்கும் மருத்துவக் கூறுகள், செரிமானக் கோளாறுகள் இருந்தால் காலை, மாலை 2 வேளையும் தனியா டீ குடிக்க வேண்டும். செரிமானக் கோளாறு, வயிறு உப்புசம், மலச்சிக்கல், பசி எடுக்காது வயிறு திம்மென்று இருத்தல், எதுக்களித்தல், நெஞ்சு கரித்தல் ஆகிய பிரச்னைகள் இருந்தால் டீ போட்டு குடிக்க வேண்டும்.
இந்த தனியா டீ எப்படி போட வேண்டும் என்றால், தனியா விதைகளை வெயிலில் நன்றாகக் காய வைத்து அதை மிக்ஸியில் போட்டு ரவை போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு டம்ப்ளர் பாலில் 1 டீஸ்பூன் தனியா தூள் போட்டு, நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும், கொதிக்கும்போது, பனவெல்லம் போட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்றால், அதில் இனிப்பு துளசி பவுடர் போட்டுக்கொள்ளுங்கள். நன்றாகக் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
இப்படி தனியா தூள் போட்டு பாலைக் கொதிக்க வைத்த தனியா டீ குடிப்பதால், நிறைய நோய்கள் வராது. இதனால் என்னென்ன நோய்கள் வராது என்றால் முதலில் கொலஸ்ட்ரால் பிரச்னை வராது, எல்.டி.எல் (LDL) என்கிற கெட்டக் கொழுப்பை குறைக்கும், ட்ரைகிளிசஸ்ஸை டக்னு குறையும்; மேலும், எச்.டி.எல் (HDL) என்கிற நல்ல கொழுப்பை அதிகரிக்கும்” என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
தனியா, பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் ஆகியவை எச்.டி.எல் (HDL) என்கிற நல்ல கொழுப்பை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று கூறும், டாக்டர் தீபா அருளாளன், இதயத்தில் கொரோனரி ஆர்டியில் கொழுப்பு படியாமல் இருப்பதற்கு இந்த தனியா டீ குடித்தால் போதும் என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்த தனியா டீயை காலையில் மாலையில் 2 வேளையும் குடித்தால் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோல், முகத்தில் சுறுக்கம் வராமல் தோலைப் பராமரிக்கிறது என்று டாக்டர் டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
“ஹைபோ தைராய்டிசத்திற்கு அதாவது தைராய்டு பிரச்னைக்கு ம் இந்த தனியா நல்ல மருந்தாக இருக்கிறது. தைராய்டு பிரச்னைக்கு தனியாவை எப்படி குடிக்க வேண்டும் என்றால், இரவே 1 டீஸ்பூன் தனியாவை ஒரு டம்பளர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தனியா ஊறவைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். அதே போல, தனியாவை மட்டும் கொதிக்க வைத்து டீ போட்டு குடிக்கலாம். அதே போல, வாரத்தில் 3 நாள் பருப்பு அடையில் தனியா போட்டு அடை சாப்பிடலாம். தனியா போட்டு வடை சாப்பிடலாம் என்று கூறும் டாக்டர் தீபா அருளாளன், ஹைபோ தைராய்டு பிரச்னைக்கு மிகச் சிறந்த மருந்து தனியா” என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.
அதே போல, முகத்தில் வரும் அதிகப்படியான முகப்பருக்கள், அக்னி ரிசோசியே, அக்னி வல்காரிஸ் கட்டிகளுக்கு தனியா டீ நல்ல மருத்தாக வேலை செய்கிறது. அதே போல, தனியாவை பன்னீர் விட்டு அரைத்து, அந்த கட்டிகள் மீது தடவுங்கள் சரியாகிவிடும்” என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.