பெங்களூரு அணி வெற்றியே பெறாததற்கு இதுதான் காரணம் – முன்னாள் வீரர் பேச்சால் சர்ச்சை!

16 hours ago
ARTICLE AD BOX

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பெங்களூரு அணி வெற்றி பெறாததற்கு இதுதான் காரணம் என்று முன்னாள் வீரர் பேசியதில் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் இந்த மாதம் 22ம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்துவிட்டனர். இந்தியாவில் நடத்தப்படும் இந்த ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி ஆவார். அதேபோல், கிறிஸ் கெயில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் ஆவார். லசித்  மலிங்கா அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் ஆவார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறையும், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகியவை தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன.

புதிதாக வந்த அணி கூட கப் அடித்துவிட்டது. ஆனால், பெங்களூரு அணி ஒருமுறை கூட கப் அடிக்கவில்லை. ஒவ்வொருமுறையும் பெங்களூரு ரசிகர்களின் பேரதிர்பார்ப்பு என்றால், அது பெங்களூரு கப் அடிப்பதுதான்.

பெங்களூரு அணி இதுவரை கப் அடிக்காததற்கு காரணம் இதுதான் என்று சதாப் ஜகாதி கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, “ பெங்களூரு நிர்வாகம் 2 அல்லது 3 வீரர்களிடம் மட்டுமே கவனம் செலுத்தும். இந்த வியூகம் இதுவரைக்கும் பெங்களூரு அணிக்கு பலம் அளிக்கவில்லை. பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது. அணி என்ற அளவில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கிரிக்கெட்டை குழுவாக விளையாட வேண்டும். சென்னை அணி அப்படிதான் விளையாடும். நான் பெங்களூரு அணியில் விளையாடியபோது 3 4 வீரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், சென்னை அணி அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்.” என்று பேசியதுதான் தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
Wi-Fi Password மறந்துவிட்டதா? உங்கள் ஸ்மார்ட்போனில் கண்டுபிடிப்பது இனி சுலபம்!
RCB
Read Entire Article