ARTICLE AD BOX
இந்தப் பதவில், சொல்லப்பட்டுள்ள மூன்று பறவைகள் உங்களது வீட்டின் கூரை அல்லது முக்கியத்திற்கு வந்தால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

Vastu Tips 3 Birds That Bring Good Luck : இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து விதிகளை பின்பற்றினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு பெருக தொடங்கும். மேலும் இது எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை ஆற்றலை பரப்ப உதவும். அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சில பறவைகள் உங்களது வீட்டில் முற்றத்திலோ அல்லது கூரையிலோ அமர்ந்திருந்தால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

உங்களது வீட்டின் உச்சத்தில் அல்லது மொட்டை மாடியில் அமர்ந்திருக்கும் பறவைக்கு உணவளித்தால் உங்களது வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பறவைகள் உங்கள் வீட்டில் அமர்ந்திருப்பது வாஸ்துபடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அது என்னென்ன பறவைகள் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: தலையணைக்கு கீழே இந்த '7' பொருள் வெச்சு தூங்குங்க.. அதிஷ்டம் பெருகும்!

ஆந்தை மிகவும் அசுபமான பறவையாக கருதப்பட்டாலும், வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆந்தை உங்கள் வீட்டிற்கு வருவது மிகவும் மங்களகரமானது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தில் ஆந்தை செல்வம் மற்றும் செழிப்பின் இருப்பிடமாக கருதப்படுகிறது. எனவே, எந்த வீட்டிற்கு ஒரு ஆந்தை வந்ததோ அந்த வீட்டில் செல்வமழை பொழியும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: Vastu Tips : அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்கு வர 'இந்த' வாஸ்து விஷயங்களை உடனே செய்ங்க!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு காகம் உங்களது வீட்டின் கூறி அல்லது முற்றத்தில் வந்தால் அதனால் உங்கள் வீட்டிற்கு புதிய விருந்தினர்கள் வருவார்கள் என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் காகம் வீட்டிற்குள் வருவது மிகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில், காகம் மூதாதையர்களுடன் தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டில் ஒரு கிளி அமர்ந்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது உங்களது வீட்டிற்கு செல்வத்தை கொண்டு வருவதற்கான அறிகுறியாக இருக்கும் என்று சொல்லுகின்றது. மேலும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் வீட்டிலும் வாழ்க்கையில் நிலைத்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்து மதத்தில் கிளி குபேரனுடன் தொடர்புடையது என்பதால், எங்க வீட்டிற்கு கிளி வருகிறதோ அந்த வீட்டில் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது.