ARTICLE AD BOX
வெல்லிங்டன்,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடரின் ஆட்டங்கள் ஆக்லாந்து, மவுண்ட் மவுங்கானி, வெல்லிங்டனில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சுசி பேட்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி விவரம்: சுசி பேட்ஸ் (கேப்டன்), ஈடன் கார்சன், சோபி டெவின், மேடி க்ரீன், ப்ரூக் ஹாலிடே, பாலி இங்கிலிஸ், பெல்லா ஜேம்ஸ், பிரான் ஜோனாஸ், ஜெஸ் கெட், மெலி கெர், ரோஸ்மேரி மெய்ர், ஜார்ஜியா பிலிம்மர், லியா தஹுஹு.
Related Tags :