ARTICLE AD BOX
உடல் எடையை குறைக்க மருத்துவர் சிவராமன் பல்வேறு வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார். இவற்றை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று ஹெல்த் தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
உடல் எடை அதிகரித்திருப்பவர்கள் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது மாத்திரை உட்கொண்டு எடையை குறைக்கலாமா என எதிர்பார்க்கின்றனர். ஆனால், உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் மற்றும் சீரான உடற்பயிற்சிகளின் மூலமாக தான் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என சிவராமன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என சிவராமன் பரிந்துரைத்துள்ளார். இதேபோல், இனிப்பு வகைகளையும் தவிர்த்து விட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழங்கு வகைகள், பச்சரிசி, மைதா போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மாதுளை, தர்பூசணி, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களை காலை உணவாக சாப்பிடலாம்.
அதேபோல பட்டை தீட்டிய தானியங்கள், பச்சரிசி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பிராய்லர் சிக்கன், குளிந்த நீர், கூல்டிரிங்ஸ் எடுத்து கொள்ள கூடாது.
இது தவிர வாரத்திற்கு ஒரு நாள் முற்றிலுமாக பழங்கள் மற்றும் நீர் உணவுகளை சாப்பிடலாம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இப்படியான உணவு திட்டத்துடன் நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
தவிர்க்க வேண்டியவை
1. பால் பொருட்கள்
2. இனிப்புகள்
3. கிழங்கு வகைகள்
4. பட்டை தீட்டிய தானியங்கள்
5. பிராய்லர் சிக்கன்
6.குளிர்ந்த உணவுகள்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.