பொது இடத்தில் உள்ள திமுக கொடி கம்பங்களை உடனே அகற்றுங்கள்..!! – அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பங்களை அகற்ற கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அந்தத் தீர்ப்பு கடந்த மார்ச் 6ஆம் தேதி அன்று உறுதி செய்யப்பட்டது. எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும்..

பொது இடங்களிலும் வைத்துள்ள கழகக் கொடிக் கம்பங்களை ‘மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்கு அகற்றிட வேண்டுமெனவும் – அவ்வாறு அகற்றப்பட்ட கழகக் கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியபடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more: காலாவதியான சோப் பயன்படுத்துறீங்களா..? ரொம்ப ஆபத்து..!! – எச்சரிக்கும் மருத்துவர் கருணா

The post பொது இடத்தில் உள்ள திமுக கொடி கம்பங்களை உடனே அகற்றுங்கள்..!! – அமைச்சர் துரைமுருகன் உத்தரவு appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article