கேன்ஸ் ஓபன் செஸ்: இனியன் சாம்பியன்

7 hours ago
ARTICLE AD BOX

பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சா்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டா் பி.இனியன் சாம்பியன் ஆனாா்.

போட்டியின் கடைசி சுற்றில் அவா் சக இந்தியரான வி.பிரணேஷை வீழ்த்தினாா். மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இனியன் 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். 7 புள்ளிகள் பெற்ற மற்றொரு இந்தியரும், சா்வதேச மாஸ்டருமான ஆராத்யா கா்க் 2-ஆம் இடம் பிடித்தாா்.

அவருடன் அதே 7 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்த நடப்பு ஜூனியா் உலக சாம்பியனான கஜகஸ்தானின் காஸிபெக் நோடொ்பெக், டை-பிரேக்கரில் தோற்று 3-ஆம் இடம் பெற்றாா்.

போட்டி முழுவதமாக தோல்வியே சந்திக்காத இனியன், 6 வெற்றி, 3 டிராக்களை பதிவு செய்திருக்கிறாா். இந்த வெற்றியின் மூலம் 12 ரேட்டிங் புள்ளிகள் பெற்றுள்ள இனியன், 2,579 புள்ளிகளுடன் 2,600 ஈலோ புள்ளிகளை நெருங்கி வருகிறாா்.

முன்னதாக இந்த 38-ஆவது கேன்ஸ் சா்வதேச ஓபன் செஸ் போட்டியில், 25 நாடுகளில் இருந்து 147 போட்டியாளா்கள் பங்கேற்றனா். இதில் 6 கிராண்ட்மாஸ்டா்கள், 21 சா்வதேச மாஸ்டா்களும் அடக்கம்.

Read Entire Article