ARTICLE AD BOX
கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் ஓப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனத்தின் ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி (OPPO A3 Pro 5G) ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ஒப்போ போன் வெளிவந்தது. இப்போது ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.15,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO A3 Pro 5G Specifications): 6.67 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில 1604 × 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் ஏஐ பீச்சர்களுடன் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு மாலி ஜி57 (Mali G57) ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஓப்போ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. பின்பு IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
5100mAh பேட்டரி உடன் ஓப்போ ஏ3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.