ARTICLE AD BOX
அள்ளி தரும் அமேசான்.. ரூ.12,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்..
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் (Samsung Galaxy M15 5G Prime Edition) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் 6000mAh பேட்டரி, 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போனுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு ரூ.389 வரை கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் அம்சங்கள் (Samsung Galaxy M15 5G Prime Edition Specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் வெளிவந்துள்ளது . மேலும் 1080 x 2340 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட
அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங்பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
50 எம்பி பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ரியர் கேமராக்கள் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம்(10x Digital Zoom), ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது சாம்சங் இந்த போன்.பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன்.
அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் எடிஷன் போனில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.