மிட்-ரேஞ்ச் மிரளுது.. 10200mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 12.7 இன்ச் டிஸ்பிளே.. QUAD ஸ்பீக்கர்.. எந்த மாடல்?

8 hours ago
ARTICLE AD BOX

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 10200mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 12.7 இன்ச் டிஸ்பிளே.. QUAD ஸ்பீக்கர்.. எந்த மாடல்?

Gadgets
oi-Harihara Sudhan
| Published: Friday, March 14, 2025, 18:06 [IST]

144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 12.7 இன்ச் டிஸ்பிளே, ஆட்டோ போகஸ் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10200mAh பேட்டரி, டால்பி அட்மோஸ் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் போன்ற பிரீமியம் டேப்லெட் மாடல்களில் கிடைக்கும் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் லெனோவா ஐடியா டேப் ப்ரோ (Lenovo Idea Tab Pro) கொடுக்கிறது. இந்திய மார்கெட்டில் புதிதாக களமிறங்கி இருக்கும் இந்த லெனோவா டேப்லெட்டின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

லெனோவா ஐடியா டேப் ப்ரோ அம்சங்கள் (Lenovo Idea Tab Pro Specifications): இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடையாது, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வரையில் அப்டேட் கொடுக்கப்பட இருக்கிறது. அதேபோல 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 10200mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனுக்கு நிகரான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 4என்எம் (Octa Cor MediaTek Dimensity 8300 4nm) சிப்செட் மட்டுமல்லாமல், மாலி ஜி 615 ஜபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் கிடைக்க இருக்கிறது.

இந்த மாடலுக்கு 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. லெனோவாவின் இசட்யூஐ 16 (ZUI 16) பேக் செய்யப்பட்டுள்ளது. டிஸ்பிளேவில் கேமிங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி பீச்சர்கள் கிடைக்கின்றன. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 12.7 இன்ச் (2944 x 1840 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.

இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலில் 273 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த லெனோவா ஐடியா டேப் ப்ரோ டேப்லெட்டில் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா மற்றும் பிக்சட் போகஸ் (Fixed Focus) சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

பெரிய டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்கள் கிடைக்கின்றன. அதாவது, ஜேபிஎல் (JBL) நிறுவனத்தின் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. இதுபோக டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆகவே, ஸ்டீரியோவைவிட அவுட்புட் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. இந்த லெனோவா ஐடியா டேப் ப்ரோ மாடலுக்கு டைப்-சி ஆடியோ (Type C Audio) கிடைக்கிறது.

கேமிங் பிரியர்கள் விரும்படியான பேக்கப் கொடுக்கும்படி 10200mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரி இருந்தும் 6.9 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. பவர்-கீ மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. வை-பை 6ஈ (Wi-Fi 6E) மற்றும் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி உள்ளது.

மேலும், லெனோவா டேப் பென் பிளஸ் (Lenovo Tab Pen Plus Stylus) மற்றும் போலியோ கேஸ் (Folio Case) கிடைக்கிறது. லூனா கிரே (Luna Grey) கலரில் ஆர்டருக்கு வர இருக்கிறது. இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999ஆக இருக்கிறது. அமேசானில் வாங்கலாம்.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Lenovo Idea Tab Pro With 8GB RAM 10200mAh Battery Launched Check Specifications Price
Read Entire Article