அள்ளி கொடுக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா.. ஓடிடி.. வாய்ஸ் கால்கள்..

5 hours ago
ARTICLE AD BOX

அள்ளி கொடுக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா.. ஓடிடி.. வாய்ஸ் கால்கள்..

News
oi-Prakash S
| Published: Friday, March 14, 2025, 21:24 [IST]

ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஏர்டெல் (airtel) நிறுவனம். அதேபோல் இப்போதும் பட்ஜெட் விலை திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்கி வருகிறது ஏர்டெல். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மைகளை தரும் ஏர்டெல் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 379 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது.பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா வழங்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அள்ளி கொடுக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும். மேலும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

அதேபோல் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), எபிக் ஆன் (Epic On), சோஷியல் ஸ்வாக் (Social Swag) சந்தா, கான்ச்சா லங்கா (Kanccha Lanka) கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), ஃபேன் கோட் (Fan Code), ஈராஸ் நவ் (Eros Now), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹோய்சோய் (HoiChoi) ஆகிய ஆப்களை பயன்படுத்த முடியும்.

இததுவிர ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), டாகுபே (Docubay), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra), சாவ்பால் (Chaupal), டாலிவுட்பிளே (Dollywood Play), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) போன்ற ஆப்களையும் பயன்படுத்த முடியும். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நீங்கள் ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
airtel Rs 379, Rs 449, Rs 649 plans offering high data and unlimited calls: check details here
Read Entire Article