ARTICLE AD BOX

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ’கிங்டம்’ படத்தின் டீசர் டிராக் வரும் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. தற்போது தன்னுடைய 12வது படத்தில் நடித்து முடித்துள்ளார். VD 12 என அழைக்கப்பட்டு வந்த அப்படத்தின் டைட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த படத்திற்கு 'கிங்டம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசருக்கு தமிழில் சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ஹிந்தியில் ரன்பீர் கபூர் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர்.
’ஜெர்ஸி’ படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி கிங்டம் படத்தை இயக்குகிறார்.
#Kingdom Teaser track from March 17th at 6:03pm@TheDeverakonda @gowtam19 @vamsi84 pic.twitter.com/SZrunB6oK0
— Anirudh Ravichander (@anirudhofficial) March 15, 2025
ஜோமன் டி ஜான், கிரிஷ் கங்காதரன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், ’கிங்டம்’ படத்தின் டீசர் டிராக் வரும் 17 ஆம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார்.