கவினின் இடத்தை பிடிக்கும் ஹீரோ.. அடுத்தடுத்து அடிக்கும் சிக்ஸர்

3 hours ago
ARTICLE AD BOX

Kavin: சின்னத்திரையில் இருந்து வரும் ஹீரோக்கள் தன்னுடைய கடின உழைப்பால் வெள்ளித்திரையில் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து கவினும் முன்னேறி வருகிறார்.

அவருடைய டாடா, லிப்ட் படங்கள் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் கவின் நடித்த பிளடிபக்கர் ஒரு நடுநிலையான விமர்சனத்தை பெற்றது. இந்த சூழலில் கவினின் இடத்தை மற்றொரு சின்னத்திரை ஹீரோ பிடிக்க இருக்கிறார்.

அதாவது ஜோ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ரியோ ராஜ். இவரும் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகன் நடித்தார். வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

கவினின் இடத்தை பிடிக்கும் ஹீரோ

அந்த வகையில் சமீபத்தில் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான படம் தான் ஸ்வீட் ஹார்ட். ஸ்வினீஸ் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக கோபிகா ரமேஷ் நடித்திருக்கிறார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு வசூல் மழையிலும் நனைந்து வருகிறது. தொடர்ந்து ரொமான்டிக் படங்களை தேர்ந்தெடுத்து ரியோ ராஜ் சிக்ஸர் அடித்து வருகிறார்.

அந்த வெற்றி படங்களில் வரிசையில் இப்போது ஸ்வீட் ஹார்ட் படமும் அமைந்துள்ளது. ஆகையால் விரைவில் கவினின் இடத்தை ரியோ ராஜ் பிடிப்பார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Read Entire Article