ARTICLE AD BOX
ஜெர்மனியில் மர்மமான முறையில் கல்லறைகளில் QR code இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து நடந்த விசாரணை மூலம் சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அவ்வப்போது பல விசித்திரமான சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கத்தான் செய்கின்றன. அதேபோல்தான் ஜெர்மனியிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு மாத கால விசாரணைக்கு பிறகு, பல குழப்பங்களுக்கு விடை தெரிந்திருக்கிறது. அதாவது ஜெர்மனியில் முனிச் நகரில் உள்ள கல்லறைகள் மற்றும் மரச் சிலுவைகளில் சுமார் 1000 ஸ்டிக்கர்கள் மர்மமான முறையில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த ஸ்டிக்கர்களில் உள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்தால், இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தின் விவரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.
இந்த ஸ்டிக்கர்களை யார் ஒட்டினார்கள். எங்கிருந்து வந்தன என்பன போன்ற அனைத்து குழப்பங்களும் மர்மமாகவே இருந்தன. அதேபோல், அந்த ஸ்டிக்கர்களை அகற்றுவது பல செலவுகளை ஏற்படுத்தும் என்பதால், அகற்றப்படாமல் இருந்து வந்தது. மேலும், போலீஸாருக்கு இதன் பின்னணியை கண்டுபிடிக்க அழுத்தம் கொடுத்து வந்தனர்.
ஒரு மாத காலமாக இருந்த இந்த மர்மத்திற்கான முடிச்சு தற்போது அவிழ்க்கப்பட்டது. அதாவது, ஒரு தோட்டக்கலை நிறுவனம் கல்லறைகளை சுத்தம் செய்து, பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அப்போது அதன் ஊழியர்களின் வசதிக்காக, எந்த கல்லறை சுத்தம் செய்யப்பட்டது, எந்த கல்லறை இன்னும் சுத்தம் செய்யப்படவில்லை என்பது அவர்கள் அறியும் வகையில் QR குறியீடு ஸ்டிக்கர்களை ஒட்டி இருந்தது.
அந்நிறுவனத்தின் மூத்த மேலாளரான ஆல்ஃபிரட் ஜான்கர் கூறியதாவது, எங்கள் நிறுவனம் பெரிய அளவில் செயல்படுகிறது . சுத்தம் செய்யும் கலை மிகவும் சிக்கலானது. அனைத்து வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும். கல்லறைகளை பழுது பார்ப்பதற்கு கற்களை அகற்றி சுத்தம் செய்து அதன் பின் மீண்டும் நிறுவ வேண்டும். இதனால் செயல்முறை சிக்கலானதாகிறது. எனவே குழப்பம் ஏற்படாமல் இருக்க அடையாளத்திற்காக இவ்வாறு செய்யப்பட்டது.” என்று பேசினார்.
அதற்குள் நம்ம பசங்க… மர்மம் மர்மம் என்று கூறி ஜெர்மனியையே அலற விட்டுவிட்டார்கள்.