கத்தார் ஓபன் டென்னிஸ்; ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

2 days ago
ARTICLE AD BOX

Image Courtesy: AFP / Andrey Rublev 

�தோகா,

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷியா) - அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவும், 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்ஸ் டி மினாரும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் விறுவிறுப்பாக நடந்தது.

இந்த செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த செட்டில் 7-6 (10-8) என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Read Entire Article