ARTICLE AD BOX

துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணி, நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை எதிர்கொண்டது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸில் தோல்வியடைந்த இந்தியா இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 முறை டாஸை இழந்திருக்கிறது. கடைசியாக கடந்த ஒருநாள் உலகக்கோப்பை (2023-ம் ஆண்டு) தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்றிருந்த இந்திய அணி அதன் பின் டாஸ் வெல்ல முடியவில்லை. இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக டாஸ் தோல்வியை தழுவிய அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்னர் நெதர்லாந்து 11 முறை இழந்திருந்ததே மோசமான சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.