ARTICLE AD BOX
துபாய்: இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் சத்தமே இல்லாமல் மிகப் பெரிய மைல்கல் சாதனையை எட்டி இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் ஒன்பது ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிலும் பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டரில் சல்மான் ஆகா மற்றும் ஷாஹீன் ஷா அஃப்ரிடி ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை அளித்தார்.

இந்தப் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் குல்தீப் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார். இந்திய அளவில் 300 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 13வது ஆக இணைந்து இருக்கிறார். மேலும் 300 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் ஐந்தாவது இடத்தையும் பிடித்து இருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
IND vs PAK: சச்சின் பதிவு.. கோலி மட்டுமில்லை இந்திய அணியின் வெற்றிக்கு 5 வீரர்களுக்கு பாராட்டு
குல்தீப் யாதவ் சர்வதேச கிரிக்கெட் போட்டி புள்ளிவிவரங்கள்:
டெஸ்டுகள்: 13 போட்டிகள், 56 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 5/40 ரன்கள்.
ஒருநாள் போட்டிகள்: 109 போட்டிகள், 174 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 6/25 ரன்கள்.
டி20 போட்டிகள்: 40 போட்டிகள், 69 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு 5/17 ரன்கள்.
அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்களின் முழு பட்டியல்:
அனில் கும்ப்ளே - 953
ரவிச்சந்திரன் அஸ்வின் - 765
ஹர்பஜன் சிங் - 707
கபில் தேவ் - 687
ரவீந்திர ஜடேஜா - 604
ஜாகீர் கான் - 597
ஜவகல் ஸ்ரீநாத் - 551
முகமது ஷமி - 458
ஜஸ்பிரித் பும்ரா - 443
இஷாந்த் சர்மா - 434
அஜித் அகர்கர் - 349
இர்பான் பதான் - 301
குல்தீப் யாதவ் - 301*