ARTICLE AD BOX

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொயப் அக்தர், சாம்பியன்ஸ் டிரோஃபியில் இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து “முட்டாள்தனமான அணி என்று சாடியுள்ளார். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான், நேற்று துபாயில் நடந்த போட்டியில் இந்தியாவிடம் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவுகளை பகிர்ந்த அக்தர், “பாகிஸ்தான் அணியின் அணிவகுப்பு மற்றும் ஆட்டக்குறைகளைக் கடுமையாக விமர்சித்தார். அனைத்து அணிகளும் ஆறு பந்துவீச்சாளர்களுடன் ஆடிக் கொண்டிருக்க, பாகிஸ்தான் அணி இரண்டு ஆல்-ரவுண்டர்களுடன் ஆடுவது முட்டாள்தனமான முடிவு என அவர் குற்றம்சாட்டினார். “இந்த தோல்வியால் நான் எந்த விதத்திலும் அதிர்ச்சியடையவில்லை. ஏற்கனவே தெரிந்ததே! சரியான அணிவகுப்பை தேர்வு செய்யாமல் எப்படி வெற்றியை எதிர்பார்க்க முடியும்? வீரர்களை குறை சொல்ல முடியாது, மேலாண்மையே அவர்களை இப்படி உருவாக்கியுள்ளது,” என்று அக்தர் பகிரங்கமாக விமர்சித்தார்.
மேலும், இந்தியாவின் வெற்றிக்குத் தோள்கொடுத்த வீரர் விராட் கோலியை பாராட்டினார். “பாகிஸ்தான் எதிரே விளையாட வேண்டும் என்றால் விராட் கோலி கண்டிப்பாக ஒரு சதம் அடிப்பார்! hats off! அவரை எல்லாம் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதே சரி! வெள்ளை பந்தில் சிறந்த ரன் சேஸர்! நேர்மையான காலத்தின் கிரேட் வீரர்! அவருக்குரிய அனைத்து பாராட்டுகளும் கிடைக்க வேண்டும்,” என்று அக்தர் பெருமிதத்துடன் கூறினார்.