ARTICLE AD BOX
பொதுத் துறையைச் சோ்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 17 சதவீத நிகர லாபச் சரிவைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8,240 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் ரூ.9,891 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி மூலம் நிறுவனம் பேரல் ஒன்றுக்கு 81.13 டாலா் ஈட்டியது. ஆனால் மதிப்பீட்டுக் காலாண்டில் அது பேரல் ஒன்றுக்கு 72.57 டாலா் எனக் குறைந்தது. இதன் காரணமாகவே நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சரிந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
