"ஒவ்வொரு 43 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை" வெளியான ஷாக் ரிப்போர்ட்.. அச்சச்சோ!

4 days ago
ARTICLE AD BOX

இந்தியாவில் தற்கொலை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, தற்கொலை இறப்பு விகிதம் 30 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளதாக தி லான்செட் பொது சுகாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு 43 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்கள், காயங்கள் மற்றும் ஆபத்து காரணிகளின் உலகளாவிய ஆய்வு (GBD) 2021 மூலம் பெற்றப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தி லான்செட் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் தற்கொலை இறப்பு விகிதம் 1990 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 18.9 ஆக இருந்தது.

வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்:

அதாவது, ஒரு லட்சம் பேரில் 18.9 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டில் இது, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 13·1 பேராக குறைந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 13 பேராக ஆக குறைந்தது.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் தற்கொலை இறப்பு விகிதம் 31·5 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆண்களை விட பெண்கள் மத்தியில் தற்கொலை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டில் பெண்களிடையே தற்கொலை இறப்பு விகிதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 16·8 ஆக இருந்தது, இது 2021இல் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 10·3 ஆகக் குறைந்தது.

மறுபுறம், 1990 ஆம் ஆண்டில் ஆண்களிடையே தற்கொலை இறப்பு விகிதம் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 20·9 ஆக இருந்தது. இது, 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 15·7 ஆகக் குறைந்தது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில், படித்த பெண்களிடையே அதிக தற்கொலை இறப்பு விகிதங்கள் காணப்பட்டுள்ளன. இதற்கு, குடும்ப பிரச்னைகளே முக்கிய காரணியாக இருந்திருக்கின்றன.

"ஒவ்வொரு 43 வினாடிக்கும் ஒரு தற்கொலை"

ஆண்டுதோறும் சுமார் 740,000 தற்கொலைகள் பதிவாகின்றன. அதாவது, சராசரியாக ஒவ்வொரு 43 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளில், உலகளவில் தற்கொலை இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு சுமார் 15 இறப்புகளிலிருந்து ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 9 இறப்புகளாக குறைந்துள்ளன.

உலகளவில் பெண்களைப் பொறுத்தவரை, தற்கொலை விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஆண்களைப் பொறுத்தவரை இது கிட்டத்தட்ட 34 சதவீதம் குறைந்துள்ளது.

Read Entire Article