ARTICLE AD BOX
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் ஆர்சிபி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

RCB vs KKR 2025: Live Score, Match Update: உலகின் மிகப்பெரிய ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 22ம் தேதி) முதல் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 10 அணிகள் மோதுகின்றன.

மொத்தம் 78 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடக்க போட்டிக்கு முன்னதாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. திஷா பதானி மற்றும் ஸ்ரேயாஸ் கோசல் உள்ளிட்ட பலர் லைவ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
கொல்கத்தா மட்டுமின்றி சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னையில் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், ஆர்சிபி அணிகளும் விளையாடுகின்றன. கொல்கத்தா அணியை பொறுத்தவவரை ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. இந்த அணியில் ரிங்கு சிங், ஆன்ட்ரே ரசல், குயின்டன் டி காக் என அதிரடி சூரர்கள் உள்ளனர்.
IPL New Rules: இனி வைடு பால் சிக்கல் இல்லை! ஐபிஎல்லில் அதிநவீன தொழில்நுட்பம்!

பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், அன்ரிச் நோர்க்யா, ஹர்சித் ராணா ஆகியோர் உள்ளனர். ஆர்சிபி அணியை பொறுத்தவரை இளம் வீரர் ரஜத் படிதார் தலைமையில் களம் காண்கிறது. இங்கும் பில் சால்ட், லியோம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஜோஸ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், குர்ணால் பாண்ட்யா ஆகியோர் பவுலிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆனால் இன்று முதல் போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.அதாவது முதல் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் நளை பலத்த மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தெற்கு வங்காளத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இன்றைய நாளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்யூவெதர் கருத்துப்படி, சனிக்கிழமை கொல்கத்தாவில் மழை பெய்ய 74% வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் மேகமூட்டம் 97% ஆக இருக்கும். மாலையில் மழை பெய்ய வாய்ப்பு 90% ஆக அதிகரிக்கிறது. எனவே, 18வது ஐபிஎல் போட்டியின் தொடக்க நாளில் ஈடன் கார்டன்ஸ் ஏராளமான மழை பெய்யும் என்பது கிட்டத்தட்ட உறுதி. கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் போதுமான ஓவர்கள் விளையாட முடியுமா என்று இப்போது சொல்வது கடினமாகும்.
KKR vs RCB: ஐபிஎல் முதல் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு! என்ன காரணம்?