திருவள்ளூர்: ரூ.1000 தகராறில், 19 வயது சட்டக்கல்லூரி மாணவர் சரமாரியாக குத்திக்கொலை..!

16 hours ago
ARTICLE AD BOX


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு, நார்த்தவாடாவில், முட்புதரில் பலத்த வெட்டுக்காயத்துடன் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாலங்காடு காவல்துறையினர், உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசன். 

போதை தகராறில் கொலை

இவரின் மகன் லோகேஷ் (19), டிப்ளோமா பார்மசி பயின்று இருக்கிறார். தற்போது திருப்பதி, வெங்கடேஸ்வரா அட்டக்கல்லூரியில் எல்.எல்.பி படிக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான லோகேஷ், நேற்று முன்தினம் இரவில் தனது ஊரைச் சேர்ந்த ஜெகனுடன் மதுபானம் அருந்தியுள்ளார். 

இதையும் படிங்க: திருவள்ளூர்: ஒன்றரை வயது குழந்தையை கடித்துக்குதறிய வெறிநாய்; பெற்றோர்களே கவனம்.. அலட்சியம் வேண்டாம்.!

அச்சமயம் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஜெகன், தான் கடனாக கொடுத்த ரூ.1000 பணத்தை லோகேஷிடம் கேட்டுள்ளார். இந்த தகராறில் ஜெகன் லோகேஷை சரமாரியாக கத்தியால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து லோகேஷை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 6 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க: தவணைத்தொகையை வாங்கி செலவழித்த நபர்; கேள்விக்கு பயந்து தற்கொலை.. தவிக்கும் காதல் மனைவி.!

Read Entire Article