ARTICLE AD BOX
சைபர் பாதுகாப்பு நிறுவனமான பிட் டிஃபெண்டரின் பாதுகாப்பு நிபுணர்கள் கூகிள் பிளே ஸ்டோரில் 331 ஆபத்தான செயலிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த செயலிகள் விளம்பர மோசடி செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த மோசடி “வேப்பர் ஆபரேஷன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து செயலிகளையும் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிவிட்டதாக கூகிள் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆராய்ச்சி முடியும் போது 15 செயலிகள் இன்னும் இருந்ததாக Bitdefender அறிக்கை கூறியுள்ளது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இது போன்ற செயல்பாடு நடந்து வருகிறது. ஆரம்பத்தில், தினமும் 200 மில்லியன் போலி விளம்பர கோரிக்கைகளை அனுப்பும் 180 பயன்பாடுகள் இதில் அடங்கும். Bitdefender இன் புதிய அறிக்கையின்படி, இந்த செயல்பாடு சுகாதார கண்காணிப்பு கருவிகள், QR ஸ்கேனர்கள், குறிப்பு எடுக்கும் பயன்பாடுகள் மற்றும் பேட்டரி சேமிப்பு பயன்பாடுகள் போன்ற 331 செயலியின் பயன்பாடுகளை குறிவைத்துள்ளது.
இந்த பயன்பாடுகள் எளிய கருவிகள் போல தோற்றமளிக்கும், ஆனால் ரகசியமாக பயனர்களுக்கு எரிச்சலூட்டும் விளம்பரங்களைக் காட்டி, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி வருகிறது, மேலும் கிரெடிட் கார்டு தகவல்களைக் கூட சேகரித்துள்ளன. போலியான லிங்க் கிளிக் செய்வதன் மூலம் விளம்பரதாரர்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதே இந்தப் பயன்பாடுகளின் நோக்கமாகும். அதில், குறிப்பாக AquaTracker, ClickSave Downloader, Scan Hawk, Water Time Tracker, Be More, TranslateScan ஆகிய ஒவ்வொரு செயலிகளையும் தலா 1 மில்லியன் (10 லட்சம்) பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது.
The post மக்களே…! இந்த 331 செயலிகள் ஆபத்தானவை… சைபர் பாதுகாப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி தகவல்…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.