ஐ.பி.எல்.2025: சென்னை, மும்பை இல்லை.. இந்த அணிதான் கோப்பையை வெல்ல வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்

7 hours ago
ARTICLE AD BOX

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 22-ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் அதிகபட்சமாக சென்னை, மும்பை தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. கடந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி 3-வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்தது.

உலக கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரை பஞ்சாப் அணி கைப்பற்ற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நான் ஒரு பஞ்சாபி அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது. அதோடு ஐ.பி.எல். தொடரில் ஒரு புதிய அணி சாம்பியனாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை" என கூறினார்.

Read Entire Article