ARTICLE AD BOX
சென்னை: டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான 52வது சீனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அணி நேற்று புறப்பட்டு சென்றது. புதுடெல்லியில் அகில இந்திய அளவிலான 52வது சீனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி, மார்ச் 17 முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தப்போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு அணியில் ஆண்கள் பிரிவில் அப்துல் அசீப், குபேந்திரபாபு, அருண் கார்த்திக், மிதுன் (அனைவரும் சென்னை), கணேசன் (திருப்பூர்), ஆரோக்கியராஜ் பிராங்க்ளின் (மதுரை) ஆகியோரும், பெண்கள் பிரிவில் செம்மொழி தமிழ் எழில், கீர்த்தனா, டெனினா, ஷோபிகா (அனைவரும் சென்னை), பிரீதா பிரின்சி (நாமக்கல்), அபினயா (மதுரை) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இப்போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அணி நேற்று சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று ரயில் மூலம் புதுடெல்லி புறப்பட்டனர். அணி மேலாளர் ஆனந்தி (மதுரை) உள்ளிட்ட நிர்வாக குழுவினரும் உடன் செல்கின்றனர்.
The post அகில இந்திய கேரம் போட்டி: தமிழ்நாடு அணி டெல்லி பயணம் appeared first on Dinakaran.