ஐஎஸ்எல் கால்பந்து லீக்: நாக் அவுட், அரையிறுதி தேதிகள் அறிவிப்பு; ஏப்.12ம் தேதி பைனல்

23 hours ago
ARTICLE AD BOX

மும்பை: லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்ததையடுத்து ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 11வது தொடருக்கான நாக் அவுட், அரையிறுதி, பைனல் என பிளே ஆப் சுற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் பிளே ஆப் சுற்றில் விளையாட மோகன் பகான் எஸ்ஜி, எப்சி கோவா, பெங்களூர் எப்சி, நார்த் ஈஸ்ட் யுனைடட் எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி, நடப்பு சாம்பியன் மும்பை எப்சி என 6 அணிகள் தகுதிப் பெற்றுள்ளன. முதல் இடம் பிடித்துள்ள மோகன் பகான், கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. எஞ்சிய 4 இடங்களை பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாட உள்ளன.

லீக் சுற்று ஆட்டங்கள் மார்ச் 12ம் தேதியுடன் முடிந்த நிலையில் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் தேதி மற்றும் இடங்களை ஐஎஸ்எல் நிர்வாகம் நேற்று அறிவித்தது. அதன்படி மார்ச் 29ம் தேதி பெங்களூரில் நடைபெறும் முதல் நாக் அவுட்டில் பெங்களூர்-மும்பை அணிகளும், மார்ச் 30ம் தேதி ஷில்லாங்கில் நடக்கவுள்ள 2வது நாக் அவுட்டில் நார்த் ஈஸ்ட்-ஜாம்ஷெட்பூர் அணிகளும் களம் காண உள்ளன. முதல் நாக் அவுட்டில் வெற்றி பெறும் அணி முதல் அரையிறுதி சுற்றில் கோவா அணியுடன் மோதும்.

இந்த அணிகள் மோதும் முதல் சுற்று ஏப்.2ம் தேதி எதிரணியின் ஊரில் நடக்கும். தொடர்ந்து 2வது சுற்று ஏப்.6ம் தேதி கோவாவில் நடத்தப்படும். அதேபோல் 2வது நாக் அவுட்டில் வெற்றி பெறும் அணி 2வது அரையிறுதியில் மோகன் பகானை எதிர்கொள்ளும். இவ்விரு அணிகள் மோதும் முதல் சுற்று ஆட்டம் ஏப்.3ம் தேதி எதிரணியின் களத்திலும், 2வது சுற்று ஏப்.7ம் தேதி கொல்கத்தாவிலும் நடக்க உள்ளன. இந்த 2 அரையிறுதி சுற்றுகளிலும் வெற்றிப் பெறும் அணிகள் மோதும் இறுதி ஆட்டம் ஏப்.12ம் தேதி நடத்தப்படும். பைனல் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

The post ஐஎஸ்எல் கால்பந்து லீக்: நாக் அவுட், அரையிறுதி தேதிகள் அறிவிப்பு; ஏப்.12ம் தேதி பைனல் appeared first on Dinakaran.

Read Entire Article