ஐ.பி.எல். 2025: கொல்கத்தா அணியின் முன்னணி வீரர் விலகல் - மாற்று வீரர் அறிவிப்பு

4 hours ago
ARTICLE AD BOX

Image Courtesy: @KKRiders

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தா அணியில் இடம் பிடித்திருந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் நடப்பு தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவர் இந்த வருட ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கொல்கத்தா நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.




The left-arm accelerated bowler is each acceptable to don Purple & Gold for different twelvemonth pic.twitter.com/Zxcl0rlxat

— KolkataKnightRiders (@KKRiders) March 16, 2025

Read Entire Article