ஐஎஸ்எல் கால்பந்து தொடா்: பிளே ஆஃப் தேதிகள் அறிவிப்பு

19 hours ago
ARTICLE AD BOX

இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் பிளே ஆஃப் சுற்று மாா்ச் 29 முதல் ஏப். 12 வரை நடைபெறவுள்ளது.

நாட்டின் பிரபலமான கால்பந்து தொடரான ஐஎஸ்எல் லீகில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. 2024-25 சீசனில் லீக் சுற்று கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது பிளே ஆஃப் சுற்று நடைபெறவுள்ளது.

மாா்ச் 29 முதல் ஏப். 12 வரை இச்சுற்று நடைபெறவுள்ளது. இதில் நாக் அவுட் ஆட்டங்கள் மாா்ச் 29, 30 தேதிகளிலும், இரண்டு கட்ட அரையிறுதி ஏப். 2, 3 மற்றும் 6, 7 தேதிகளிலும் நடைபெறவுள்ளது. முக்கியமான இறுதி ஆட்டம் ஏப். 12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

கொல்கத்தாவின் மோகன் பகான் அணி தொடா்ந்து 2-ஆவது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. மோகன்பகான்,

எஃப்சி கோவா (2), பெங்களூரு எஃப்சி (3), நாா்த் ஈஸ்ட் யுனைடெட் (4), ஜாம்ஷெட்பூா் (5), மும்பை சிட்டி எஃப்சி (6) உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இதில் 3 முதல் 6-ஆவது இடம் வகிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றில் மோதும். இதில் வெல்லும் அணிகள் அரையிறுதிக்கு நேரடித் தகுதி பெற்றுள்ள மோகன்பகான், எஃப்சி கோவா அணியுடன் மோதும். அரையிறுதி ஆட்டங்கள் சொந்த மைதானம் மற்றும் வெளியூா் மைதானங்கள் என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதில் வெல்லும் அணி, பட்டியலில் முதலிடம் பெறும் அணி ஏப். 12 இறுதிச் சுற்றில் மோதும்.

அட்டவணை:

நாக் அவுட் 1, மாா்ச் 29-பெங்களூரு (உள்ளூா்)-மும்பை சிட்டி எஃப்சி,

நாக் அவுட் 2, மாா்ச் 30-நாா்த் ஈஸ்ட் (உள்ளூா்)-ஜாம்ஷெட்பூா் எஃப்சி,

அரையிறுதி ஆட்டங்கள்:

முதல் கட்டம்: ஏப். 2, நாக் அவுட் 1 வின்னா் (உள்ளூர)-எஃப்சி கோவா. நாக் அவுட் 2 வின்னா்(உள்ளூா்)-மோகன் பகான் எஃப்சி.

இரண்டாம் கட்டம், ஏப். 6, எஃப் சி கோவா (உள்ளூா்)=நாக் அவுட் 1 வின்னா், ஏப். 7, மோகன் பகான் (உள்ளூா்- நாக் அவுட் 2 வின்னா்.

ஏப். 12-இறுதி ஆட்டம்: அரையிறுதி 1 வின்னா் -அரையிறுதி 2 வின்னா்.

பிளே ஆஃப்பில் இரு அணிகளும் சமநிலையில் கோலடித்திருந்தால், கூடுதல் நேரம், பெனால்டி வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த சுற்று ஆட்டங்கள் ஜியோ ஹாட்ஸ்டாா், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் -3, ஒளிபரப்பாகும்.

Read Entire Article