ARTICLE AD BOX
Published : 18 Mar 2025 11:40 PM
Last Updated : 18 Mar 2025 11:40 PM
“பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராபி வெல்வதே என் இலக்கு” - ஸ்ரேயஸ் ஐயர் உறுதி

பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஏலத்தில் எடுக்கப்பட்ட தருணத்தில் இருந்தே, என்னுடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும், நான் ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன், அவர்களுக்கு கொண்டாடுவதற்காக ஒரு காரணத்தை கொடுக்க வேண்டும். சீசனின் முடிவில் ஒரு பஞ்சாபி கொண்டாட்டம் சிறப்புவாய்ந்ததாக இருக்கும்.
அணியில் உள்ள அனைவருக்கும் அவரவர் பலம் தெரியும். மேலும் கேப்டன் பதவியைப் பெறுபவர், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வார். கூடுதல் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது அர்த்தமற்றது. ஏனென்றால் ஒவ்வொரு நபரும் அவரவர் வழியில் ஒரு தலைவர்தான். இந்திய அணியில், நாங்கள் பொதுவாக ஐபிஎல் பற்றிப் பேசுவதில்லை. எங்கள் கவனம் எப்போதும் தேசிய அணியின் இலக்குகளில் தான் இருக்கும். சில நேரங்களில் ஐபிஎல் விவாதங்கள் ஏலத்தைச் சுற்றி நடக்கும்” இவ்வாறு ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- அவுரங்கசீப் சமாதியை இடித்தால் ரூ.21 லட்சம் வெகுமதி: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி தலைவர் அறிவிப்பு
- ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தை: 2 மணி நேரத்தை தாண்டிய போன் உரையாடல்!
- “திமுகவின் ஏமாற்று அரசியலுக்கு இஸ்லாமியர்கள் பலியாக வேண்டாம்!” - வேலூர் இப்ராகிம்
- ஆர்.எஸ்.மங்கலம் அருகே 174 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு