விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்த தேவையில்லை - டி வில்லியர்ஸ்

3 hours ago
ARTICLE AD BOX

image courtesy: PTI

பெங்களூரு,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்கான பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். 17 சீசன்களாக கோப்பையை வெல்லாத அந்த அணியின் கோப்பை ஏக்கத்தை இந்த சீசனில் புதிய கேப்டன் ரஜத் படிதார் தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் ஐ.பி.எல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி அவரது ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த தேவையில்லை எனவும், அவர் ஸ்மார்ட்டாக விளையாட வேண்டும் எனவும் ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

விராட் கோலி கிரிக்கெட்டினை அனுபவித்து விளையாடுவதாக நினைக்கிறேன். அவர் பில் சால்ட்டுடன் விளையாடும்போது, அவரது ஸ்டிரைக் ரேட்டினை அதிகப்படுத்த தேவையிருக்காது என நினைக்கிறேன். நாம் பார்த்ததிலேயே அதிரடியாக விளையாடக் கூடிய ஆட்டக்காரர்களில் ஒருவர் பில் சால்ட். விராட் கோலியின் மீதான அழுத்தத்தை பில் சால்ட் எடுத்துவிடுவார் என நினைக்கிறேன்.

பல ஆண்டுகளாக விராட் கோலி கிரிக்கெட்டில் செய்து வருவதை தொடர்ந்தாலே போதுமானதாக இருக்கும். அவர் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்து புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும். அவருக்கு எப்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் என்பது தெரியும்.

கடந்த சில சீசன்களாக விராட் கோலியின் பேட்டிங்கின் மீது தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் அவரது ஆட்டத்தில் சிறிதளவாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவரும் மனிதர்தான்.

அவரது மனதில் சில சந்தேகங்கள் எழுந்திருக்கலாம். ஆனால், விராட் கோலி எப்போதும் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். முக்கியமான தருணங்களில் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத் தந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article