விராட் கோலியின் வேண்டுகோளை ஏற்று தங்களது கடுமையான ரூல்ஸை தளர்த்தும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

3 hours ago
ARTICLE AD BOX

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை முற்றிலுமாக இழந்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போதும் அங்கு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு நான்கு (1-4) என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த இரண்டு தொடர்களின் தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

விராட் கோலியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த பி.சி.சி.ஐ :

இப்படி அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ வீரர்களின் மீது சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த வகையில் இனி இந்திய வீரர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவர்களது குடும்பத்தாரை அழைத்துச் செல்லக்கூடாது என்றும் ஒருவேளை அப்படி குடும்பத்தாரை அழைத்துச்சென்றால் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது.

அதனை தொடர்ந்து துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்திய வீரர்கள் யாரும் தங்களது குடும்பத்தாரை அழைத்துச் செல்லவில்லை. இருந்தாலும் இந்த விடயம் முன்னணி வீரர்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பி.சி.சி.ஐ-யின் இந்த விதிமுறை குறித்த சில விமர்சனங்களையும் வீரர்கள் முன் வைத்திருந்தனர்.

அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரரான விராட் கோலி கூறுகையில் : பிசிசிஐ-யின் இந்த விதியில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் வீரர்களின் குடும்பத்தார் அவர்களுடன் இருக்க ஆசைப்படுவார்களா? என்று கேட்டால் ஆமாம் என்று தான் நான் கூறுவேன். ஏனெனில் போட்டிக்கு பிறகு தனியாக ரூமிற்கு சென்று சோகமாக இருக்க விரும்பவில்லை. இயல்பாக இருக்க வேண்டுமெனில் குடும்பத்தார் வீரர்களுடன் இருக்க வேண்டும் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

இந்நிலையில் விராட் கோலியின் இந்த கருத்திற்கு செவி சாய்த்துள்ள பிசிசிஐ தற்போது அவர்களது கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி :

இதையும் படிங்க : 4 பந்தில் முடிச்ச அஸ்வினை கண்டறிந்தது தோனி தான்.. பாத்ததுமே கிறிஸ் கெய்ல் கால் நடுங்குச்சு.. ஸ்ரீகாந்த் பேட்டி

வெளிநாடுகளில் நீண்ட நாட்கள் நடக்கும் தொடர்களுக்கு வீரர்கள் தங்களது குடும்பத்தாரை அழைத்துச் செல்ல விரும்பினால் முன்கூட்டியே பிசிசிஐ-யிடம் விண்ணப்பித்து முறையான அனுமதி பெற்றால் இனி குடும்பத்தாரை அழைத்துச் செல்லலாம் என்ற விதிமுறையை கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விராட் கோலியின் வேண்டுகோளை ஏற்று தங்களது கடுமையான ரூல்ஸை தளர்த்தும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ appeared first on Cric Tamil.

Read Entire Article