ARTICLE AD BOX
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ஆலோனைக் கூட்டத்தில் உக்ரைன் சார்பில் எந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை. இதனிடையே, ”எங்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்க முடியாது” உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும் ஐ.நா. பொதுச் சபை நேற்று தீர்மானம் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது. தவிர பெலாரஸ், வட கொரியா மற்றும் சூடான் ஆகிய நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்தன.
முந்தைய அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்தது. மேலும், ரஷ்யாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டில் அமைந்துள்ள ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கிறது. 193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா. பொதுச் சபை உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தாக்கல் செய்த ‘விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்’ என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்த தீர்மானத்திற்கு மொத்தம் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. மேலும் 65 பேர் இதில் வாக்களிக்கவில்லை. இந்தப் போரில் அமைதியான தீர்வு காண அழைப்பு விடுத்துள்ள இந்தியா, வாக்களிப்பில் இருந்து விலகியது.