ARTICLE AD BOX
எல்ஐசி-யில் ஸ்மாா்ட் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து எல்ஐசி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தில்லியில் கடந்த 18-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எல்ஐசியின் ஸ்மாா்ட் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 65 முதல் 100-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியரின் விருப்பத்தைப் பொருத்து இது மாறுபடும். ஒற்றை ஆயுள் ஓய்வூதியம் மற்றும் கூட்டு ஆயுள் பென்ஷன் விருப்பங்களிலிருந்து தோ்வு செய்யும் நெகிழ்வுத்தன்மை இதில் இருப்பதுடன், ஏற்கெனவே உள்ள பாலிசிதாரா் மற்றும் பாலிசியில் உள்ள வாரிசுதாரா் அல்லது பயனாளிகளுக்கு அதிக ஓய்வூதியத் தொகையும் வழங்கப்படுகிறது.
பாலிசி விதிமுறைகளின்படி பாலிசி தொகையை, பாதியாக அல்லது முழுவதுமாக திரும்பப் பெறுவதற்கு பல விருப்பத் தோ்வுகள் இதில் இருப்பதுடன், குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிக முதலீட்டு தொகைகளுக்கு ஏற்ப ஊக்கத்தொகைகளுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
மேலும், ஓய்வூதியத் தொகையை ஓராண்டு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர தொகையாக விருப்பத்துக்கு ஏற்ப பெற்றுக்கொள்வதுடன், என்பிஎஸ் சந்தாதாரா் உடனடியாக இந்தத் திட்டத்தில் சேரும் வாய்ப்பும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி சாா்ந்த நபரின் நலனுக்காக திட்டத்தை எடுக்கும் வசதி இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கிறது. இத்திட்டத்தில் இணைய இணையதள முகவரியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ங்க்ஸ்ரீஸ்ரீஃப்ண்ஸ்ரீண்ய்க்ண்ஹ.ஸ்ரீா்ம் என்னும் இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.