ARTICLE AD BOX
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக கோவாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முகமதன் எஸ்சி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது எஃப்சி கோவா.
இரு அணிகள் மோதிய ஆட்டம் கோவா நேரு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடக்கம் முதலே எஃப்சி கோவா அணி ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. முகமதன் அணியின் தற்காப்பு அரணை அடிக்கடி ஊடுருவி கோலடிக்க முயன்றனா் கோவா வீரா்கள்.
ஆட்டத்தின் 40-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் ஐகோ் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். ஆயுஷ் ஹெட்டா் மூலம் அனுப்பிய பந்தை பயன்படுத்தி கோலடித்தாா் ஐகோ். பதில் கோலடிக்க முகமதன் அணி மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
86-ஆவது நிமிஷத்தில் முகமதன் அணி வீரா் சேத்ரி அடித்த சுய கோல் கோவா அணியின் வெற்றி கோலாக மாறியது.
இறுதியில் 2-0 என்ற கோல்கணக்கில் எஃப்சி கோவா வென்றது.
23 ஆட்டங்களில் 48 புள்ளிகளுடன் உள்ள கோவா அணியும், மோகன்பகான் அணியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. இதனால் எலிமினேட்டா் ஆட்டத்தில் ஆடத் தேவையில்லை.