சாம்பியன்ஸ் கோப்பை முதல் அரையிறுதி ஆஸி.யை வீழ்த்தி பைனலில் இந்தியா: கோஹ்லி ரன் வேட்டை

2 hours ago
ARTICLE AD BOX

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கூப்பர் கோனோலி களமிறங்கினர். முகமது ஷமி வீசிய பந்து வீச்சில் கூப்பர் கோனோலி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் 39, மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 29, ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன் எடுத்தது நடை கட்டினர்.

சிறப்பாக விளையாடி கேப்டன் ஸ்மித் 73 ரன், அலெக்ஸ் கேரி 61 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 264 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்து வீச்சில் முகமது ஷமி 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா தலா 2, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 265 ரன் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக இறங்கிய சும்பன் கில் 8 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 3 விக்கெட்டுக்கு விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

விராட் கோஹ்லி அரை சதத்தை கடந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் பட்டேலும் 27 ரன்னில் நடையை கட்டினார். சிறப்பாக விளையாடி விராட் கோலி 84 ரன்னில் வெளியேற, அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியாவும் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, கே.எல்.ராகுல், ஜடேஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 48.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 267 ரன் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 ரன்னிலும், ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா, நாதன் எலீஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

* அதிக சிக்சர்கள் ஐசிசி தொடர்களில் அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் கேப்டன் ரோகித் சர்மா 65 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

* 14 ஆண்டுக்கு பின்…
ஐசிசி தொடரின் நாக்அவுட் போட்டியில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி உள்ளது. கடைசியாக 2011 உலகக்கோப்பையின் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தி உள்ளது குறப்பிடத்தக்கது.

* சேசிங்கில் கோஹ்லி 8,000 ரன் கே.எல்.ராகுல் 3,000 ரன்
* ஒருநாள் போட்டிகளில் சமீபத்தில் 14,000 ரன்களை விராட் கோஹ்லி கடந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் சேசிங்கில் மட்டும் 8,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த பட்டியலில் சச்சின் 8720 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 2ம் இடத்தில் விராட் கோஹ்லி உள்ளார்.
* கே.ராகுல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நேற்று 3000 ரன்களை கடந்தார். 84 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 7 சதம், 18 அரை சதம் விளாசி உள்ளார். சரசாரி 47.

The post சாம்பியன்ஸ் கோப்பை முதல் அரையிறுதி ஆஸி.யை வீழ்த்தி பைனலில் இந்தியா: கோஹ்லி ரன் வேட்டை appeared first on Dinakaran.

Read Entire Article