"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!

14 hours ago
ARTICLE AD BOX

குஜராத் கோத்ராவில் கடந்த 2022ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத துயர சம்பவம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் அனைவருக்கும் துயரமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

குஜராத் கலவரம் நடந்தது எப்படி?

அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியும் பாட்காஸ்ட் தொகுப்பாளருமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். 2002 குஜராத் கலவரம் குறித்து கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "குஜராத்தில் நடந்த கலவரங்கள், பலர் நினைப்பது போல், இதுவரை கண்டிராத மோசமான கலவரம் அல்ல. அதன்பிறகு மாநிலத்தில் எந்த வகுப்புவாத பதற்றமும் ஏற்படவில்லை.

கோத்ரா வழக்கைச் சுற்றி போலி கதையாடல் பரப்பப்பட்டது. கடந்த 2002ஆம் ஆண்டுக்கு முன்பு குஜராத்தில் 250க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்தன. வகுப்புவாத வன்முறைகள் அடிக்கடி நிகழ்ந்தன. அந்தக் காலங்களில் உலகில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்தன. வன்முறை செயல்கள் அதிகரித்தன. இருப்பினும், 2002 ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை.

கலவரங்களுக்குப் பிறகு எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயன்றனர். ஆனால், இறுதியில் நீதி வென்றது. நீதிமன்றங்கள் என்னை குற்றமற்றவர் என தீர்ப்பு அளித்தன" என்றார். குஜராத் கலவரத்திற்கு முன்பு நடந்த தீவிரவாத செயல்களை பட்டியலிட்ட பிரதமர், "காந்தஹார் விமானக் கடத்தல், அமெரிக்காவில் 9/11 தாக்குதல், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்கள் என இந்த நிகழ்வுகள், குஜராத் கலவரத்திற்கு முன்பு ஒரு சூழலை உருவாக்கியது.

மனம் திறந்த பிரதமர் மோடி:

இவ்வளவு பதட்டமான சூழலில், சிறிய தீப்பொறி கூட அமைதியின்மையைத் தூண்டிவிடும். நிலைமை ஏற்கனவே மிகவும் கொந்தளிப்பாக மாறியிருந்தது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காந்தஹார் விமானக் கடத்தல், நாடாளுமன்ற தாக்குதல், அல்லது 9/11 போன்ற சம்பவங்களின் பின்னணியில், பின்னர் பலர் கொல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டதை நீங்கள் கற்பனை செய்யலாம். நிலைமை எவ்வளவு பதட்டமாகவும் நிலையற்றதாகவும் இருந்தது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். நிச்சயமாக, இது அனைவருக்கும் துயரமானது, எல்லோரும் அமைதியை விரும்புகிறார்கள்.

நான் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே, குஜராத் கலவரத்திற்கு நீண்ட வரலாறு இருந்தது. ஆனால், 2002 ஆம் ஆண்டு நடந்த அந்த ஒரு துயர சம்பவம் ஒரு தீப்பொறியாக மாறியது. சிலரை வன்முறையை நோக்கி இட்டுச் சென்றது.

ஆனாலும், நீதித்துறை இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்தது. அந்த நேரத்தில், நமது அரசியல் எதிரிகள் அதிகாரத்தில் இருந்தனர், இயற்கையாகவே, அவர்கள் நம் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிலைநிறுத்த விரும்பினர்" என்றார்.

Read Entire Article