சபாநாயகரை நீக்கக்கோரிய அதிமுகவின் தீர்மானம் தோல்வி!

7 hours ago
ARTICLE AD BOX

பேரவைத் தலைவரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல், டிவிசன் முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேவையில், பேரவைத் தலைவர் அப்பாவுவை நீக்கக்கோரி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமார் தீர்மானத்தை கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தை உடனே வாக்கெடுப்புக்கு விடும்படி கோரினார். தீர்மானத்தை உடனே எடுத்து கொள்ளப்பட்டது. இதனால், பேரவைத் தலைவர் அப்பாவு தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றார்.

பின்னர் துணை பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பை நடத்தினார். பின்னர் அந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பேசினார். இதையடுத்து, இந்த தீர்மானம் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்பட்டது.

தீர்மானத்தை ஏற்று ஆம் என்று ஒலிக்கும் மொத்த குரலையும், இல்லை என்று ஒலிக்கும் குரலையும் துணை சபாநாயகர் கணக்கிட்டு கொண்டார். இதில், இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பேரவைத் தலைவரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல், டிவிசன் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டது. டிவிஷன் முறையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 154 வாக்குகளும் விழுந்தன.

பேரவைத் தலைவரை நீக்கக்கோரி அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால், அப்பாவு மீண்டும் பேரவைத்தலைவர் இருக்கையில் வந்தமர்ந்தார். தொடர்ந்து அவையை அவர் வழக்கம்போல் அவையை வழிநடத்துவார்.

Read Entire Article