ARTICLE AD BOX
வெயிலுக்கு குளு குளுன்னு வீட்டிலேயே ஐஸ்கிரீம் எப்படி செய்து சாப்பிடுவது என்று பார்ப்போம்.
நிறைய எஸ்என்ஸ் எதுவும் இல்லாமல் பிஸ்கட் வைத்து எளிமையாக வீட்டிலேயே செய்வது பற்றி இந்தியன் ரெசிப்பிஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பால்
பிஸ்கட்
சர்க்கரை
காபி தூள்
செய்முறை
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் ஏதாவது ஒரு பிஸ்கட்டை நன்கு உடைத்து சேர்த்து கலந்து விடவும். பின்னர் அதில் சர்க்கரை, காபித்தூள் அல்லது கொக்கோ பவுடர் சேர்த்து கரைத்து விடவும்.
பின்னர் பால் கெட்டியானதும் அதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இதை ஃப்ரிட்ஜில் ஒரு 5 மணி நேரம் வைத்து எடுத்தால் கெட்டியாகிவிடும்.
பின்னர் அதை உருகவிடாமல் கெட்டியாக இருக்கும் போதே மீண்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து மீண்டும் அதை ஒரு பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
நன்கு கெட்டியானதும் அதை எடுத்தால் அவ்வளவுதான் கடைகளில் கிடைப்பது போல சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் வீட்டிலேயே ரெடியாகிவிடும்.
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கி கொடுக்காமல் இனி வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்து கொடுங்கள்.